‘பன் பட்டர் ஜாம்’ நாயகி பவ்யா ட்ரிகா
20 Jul 2025
2022ல் வெளியான ‘கதிர்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் பவ்யா ட்ரிகா. அதன்பின் 2023ல் ரியோ ராஜ் ஜோடியாக நடித்த ‘ஜோ’ திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அப்படம் 50 நாட்கள் ஓடிய வெற்றிப் படமாக அமைந்தது.
சென்னையில் உள்ள கல்லூரியில் ஊடகக் கல்வி பயின்றவர் பவ்யா. இரு தினங்களுக்கு முன்பு வெளியான ‘பன் பட்டர் ஜாம்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அப்படத்திலும் அவருடைய கதாபாத்திரமும், நடிப்பும் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
5 அடி 5 அங்குல உயரம், 55 கிலோ எடையுடன் ஸ்லிம்மான தோற்றத்தில், பாரம்பரிய, நவீன ஆடைகளில் பொருத்தமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ‘வெற்றியை விட திறமையை மதிப்பிடுங்கள்’ என்பதுதான் பவ்யாவின் நம்பிக்கையாக உள்ளது.
Tags: bhavya trikha