‘பனாரஸ்’ படத்தின் ‘ட்ரால்’ பாடல் வெளியீடு

17 Sep 2022

ஜெயந்திரா இயக்கத்தில், சயத் கான் மற்றும் சோனால் மாண்டெய்ரோ நடித்துள்ள பான் இந்தியா படம் ‘பனாரஸ்’.

வருகிற நவம்பர் மாதம் 4ம்  தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. 

‘பனாரஸ்’ படத்தில் இருந்து ‘ட்ரால்’ என தலைப்பிடப்பட்டுள்ள புதிய பார்ட்டி பாடல் வெளியாகியுள்ளது. அஜ்னேஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்த பாடலை ஜாஸி கிப்ட் கிஃப்ட் பாடியுள்ளார். 

பாடலில் இடம்பெற்றுள்ள ‘பணம் முக்கியமில்லை’ என்ற வரிகள் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

பாங்காங்கில் ஒரு பெரிய கூட்டத்தில் இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த பாடல் படமாக்கப்பட்டுள்ளது. யூடியூப் தளத்தில் இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

Tags: Banaras, Zaid Khan, Sonal Monteiro, Jayathirtha, Ajaneesh Loknath

Share via: