கலைப்புலி எஸ் தாணு வழங்க, வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், இந்துஜா, எல்லி அவ்ர்ரம் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘நானே வருவேன்’.

தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். செல்வராகவன், யுவன், தனுஷ் கூட்டணி என்றாலே ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பார்கள். அது போலவே இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பும் மிக அதிகமாக உள்ளது.

இப்படத்தில் இடம் பெற்ற ‘வீர தீர சூரா’ என்ற பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. யு டியூபில் அந்தப் பாடல் 8 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 

இப்படத்தின் டீசர் நேற்று மாலை  யு டியூபில் வெளியிடப்பட்டது. அதற்கான விழா நேற்று சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டர் வளாகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட எல்இடி திரையில் திரையிடப்பட்டது. ஏராளமான தனுஷ் ரசிகர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.

இம்மாதம் 29ம் தேதி இப்படம் வெளியாகும் எனத் தெரிகிறது.