2021ம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் படங்கள்
02 Jan 2021
2020ம் ஆண்டு கொரானோ தொற்று பரவல் காரணமாக தியேட்டர்கள் எட்டு மாதங்கள் மூடுப்பட்டு பின்னர் திறக்கப்பட்டன. அந்த காலகட்டங்களில் வெளியாக வேண்டிய பல படங்கள், இந்த 2021ம் ஆண்டிற்கு மாற்றப்பட்டன.
அந்த விதத்திலும், இந்த ஆண்டிற்காக எடுக்கப்பட்ட படங்களிலும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களாக சில முக்கிய படங்களைச் சொல்லலாம். அடுத்தடுத்து வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்புடன் உள்ள அந்தப் படங்களின் பட்டியல்தான் கீழே...
மாறா
இயக்கம் - திலிப்குமார்
இசை - ஜிப்ரான்
நடிப்பு - மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவதா
பூமி
இயக்கம் - லட்சுமண்
இசை - இமான்
நடிப்பு - ஜெயம் ரவி, நிதி அகர்வால்
மாஸ்டர்
இயக்கம் - லோகேஷ் கனகராஜ்
இசை - அனிருத்
நடிப்பு - விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன்
ஈஸ்வரன்
இயக்கம் - சுசீந்திரன்
இசை - தமன்
நடிப்பு - சிம்பு, நிதி அகர்வால், பாரதிராஜா
சக்ரா
இயக்கம் - எம்எஸ் ஆனந்தன்
இசை - யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு - விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா
ஜகமே தந்திரம்
இயக்கம் - கார்த்திக் சுப்பராஜ்
இசை - சந்தோஷ் நாராயணன்
நடிப்பு - தனுஷ், ரெஜிஷா விஜயன்
வெள்ளை யானை
இயக்கம் - சுப்பிரமணிய சிவா
இசை - சந்தோஷ் நாராயணன்
நடிப்பு - சமுத்திரக்கனி, ஆத்மியா
லாபம்
இயக்கம் - எஸ்.பி.ஜனநாதன்
இசை - இமான்
நடிப்பு - விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன்
சுல்தான்
இயக்கம் - பாக்கியராஜ்
இசை - விவேக் மெர்வின்
நடிப்பு - கார்த்தி, ராஷ்மிகா மந்தானா
சர்பேட்டா பரம்பரை
இயக்கம் - பா.ரஞ்சித்
இசை - சந்தோஷ் நாராயணன்
நடிப்பு - ஆர்யா, துஷாரா
வலிமை
இயக்கம் - வினோத்
இசை - யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு - அஜித், ஹுமா குரேஷி
அண்ணாத்த
இயக்கம் - சிவா
இசை - இமான்
நடிப்பு - ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு
கோப்ரா
இயக்கம் - அஜய் ஞானமுத்து
இசை - ஏஆர் ரகுமான்
நடிப்பு - விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, இர்பான் பதான்
டாக்டர்
இயக்கம் - நெல்சன்
இசை - அனிருத்
நடிப்பு - சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன்
நெற்றிக்கண்
இயக்கம் - மிலிந்த் ராவ்
இசை - கிரிஷ்
நடிப்பு - நயன்தாரா, அஜ்மல்
தலைவி
இயக்கம் - விஜய்
இசை - ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு - கங்கனா ரணவத், அரவிந்த்சாமி
ஜெயில்
இயக்கம் - வசந்தபாலன்
இசை - ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு - ஜிவி பிரகாஷ்குமார், அபர்ணதி
கடைசி விவசாயி
இயக்கம் - மணிகண்டன்
இசை - இளையராஜா
நடிப்பு - நல்லாண்டி, விஜய் சேதுபதி
Tags: ajith,2021, 2021 tamil movies, 2020 tamil cinema, master, annathe, valimai, vijay, rajinikanth