தணல் - விமர்சனம்
12 Sep 2025
இயக்குநர் இ.ஜான் பீட்டர், உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, விவசாயிகளின் போராட்டமும் அவர்களைச் சூழும் கொடூரங்களும் போன்ற சமூக விமர்சனங்களைத் தொடும் படமாக இந்த 'தணல்' படத்தைக் கொடுத்திருக்கிறார்.
அதர்வா, அஷ்வின் காக்கமணு, லாவண்யா திரிபாதி, பிரதீப் விஜயன், தரணி ஆகியோர் நடிப்பில் வந்த இந்தத் த்ரில்லர், நகரின் மையத்தில் உள்ள ஆளில்லா குடிசைப் பகுதியில் கொடூர கொள்ளைக் கும்பலின் கொலை வெறி தாக்குதலை மையமாகக் கொண்டு பரபரப்பாக நகர்கிறது.
போலீஸ் கான்ஸ்டபிளாகப் பணியில் சேர்ந்த நாயகன் அதர்வா, அவருடன் இணைந்த ஐந்து சக ஊழியர்களுடன் ரவுண்ட்ஸ் செல்லும் போது, பாதாள சாக்கடை மூடியைத் திறந்து தப்பும் சந்தேக நபரைத் துரத்தி, மிகப்பெரிய மதிலைத் தாண்டி உள்ளே நுழைந்து, அங்கு அஷ்வின் உட்பட மூன்று பேர் நின்ற இடத்தில் போலீஸ் தரணியை கத்தியால் துண்டித்துக் கொன்று, அவர்களைச் சுற்றிச் சூழ்ந்து தாக்கும் கொடூர கும்பலின் நோக்கம் என்ன, இந்தக் கொலை வெறி ஏன் என்பதற்கான விடையை இரண்டாம் பாதியில் ப்ளாஷ்பேக்குடன் விளக்குகிறது.
இதில் விவசாயம் ஏன் அழிந்தது, வங்கிகள், காவல்துறை போன்றவை விவசாயிகளுக்கு எதிரி ஆனது போன்ற சமூக சிந்தனைகளைத் தொடுகிறது, குறிப்பாக பறைசாற்றல் போன்ற இன்றும் நடக்கும் உண்மை சம்பவங்களைத் திரையில் பதிவு செய்துள்ளார் இயக்குநர்.
அதர்வா, கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அளவோடு, காதல் காட்சிகளில் மிளிரும் வகையில் நடித்திருந்தாலும், சில இடங்களில் ஓவர் ஆக்டிங் தவிர்க்கப்படாததால் சற்று தடுமாற்றம் தெரிகிறது, ஆனால் அவரது போராட்ட உணர்வு படத்துக்கு உயிர் கொடுக்கிறது.
வில்லன் என்று சொல்லாமல் மற்றொரு நாயகனாகத் திகழும் அஷ்வின் காக்கமணு, எந்தப் படத்திலும் இல்லாத அளவிற்கு பயத்தை ஏற்படுத்தும் வில்லத்தனத்தில் மிரட்டிய நடிப்பை வழங்கி, ப்ளாஷ்பேக் காட்சிகளில் கண்களில் ஈரத்தை வரவழைக்கிறார், இவரது டூயல் சேட் படத்தின் மிகப்பெரிய பலம்.
நாயகி லாவண்யா திரிபாதி தனது அழகால் காட்சிகளை அலங்கரித்திருக்கிறார், மற்ற கதாபாத்திரங்கள் தங்கள் பங்கை கச்சிதமாகச் செய்திருக்கின்றன, குறிப்பாக பிரதீப் விஜயன் சிறப்பாகத் திகழ்கிறார்.
இயக்குநர் இ.ஜான் பீட்டர், ஆரம்ப காட்சியிலிருந்து இடைவேளை வரை பரபரப்பாகக் காட்சிகளை இணைத்து, நம்மை சீட்டின் நுனியில் அமர வைக்கிறார், ஆனால் இரண்டாம் பாதியில் கதையைத் தாங்கிச் செல்லும் விதத்தில் தடுமாற்றம் தெரிகிறது, வங்கிகளை மாணவர்கள் கொள்ளையடிப்பது, காவல்துறையை முதல் எதிரியாகக் காட்டுவது போன்ற ஓட்டைகள் கதையை ஒட்டாமல் போகச் செய்கின்றன, சில காட்சிகள் முன்னுக்கு பின்னாக ஏற்க முடியாதவையாக உள்ளன.
ஜஸ்டின் பிரபாகரின் இசையில் பாடல்கள் ஒருமுறை கேட்கும் தரமானவை, பின்னணி இசை த்ரில்லருக்கு உயிர் கொடுக்கிறது, ஒளிப்பதிவு சண்டை, துரத்தல் காட்சிகளை கச்சிதமாகப் பதிவு செய்திருக்கிறது.
மொத்தத்தில், இன்றும் நடக்கும் விவசாய அழிவு போன்ற உண்மை சம்பவங்களைத் தொடும் இந்தப் படம், திரைக்கதை ஓட்டைகளால் ஏமாற்றம் தருகிறது, இருந்தாலும் சமூக சிந்தனைக்காகப் பார்க்கத் தகுந்த ஒரு படம்தான் தணல்.

Tags: thanal