காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளி, 85 - 87ம் ஆண்டு மாணவர்கள் சந்திப்பு

காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் 1985ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை 11 மற்றும் 12ம் வகுப்பு படித்த மாணவர்கள் 33 ஆண்டுகள் கழித்து நேற்று பிப்ரவரி 9ம் தேதி பள்ளியில் சந்தித்துக கொண்டனர்.

அவர்களுக்கு பள்ளியில் கல்வி கற்றுத் தந்து தற்போது ஓய்வு பெற்றுள்ள 20 ஆசிரியர்களும் இந்த நிகழ்வுக்கு வந்திருந்து மாணவர்களை வாழ்த்தினர்.

இந்த நிகழ்வில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அந்த வருடங்களில் படித்த மாணவர்களில் பலர் தற்போது அரசு உயர் பதவிகள், டாக்டர்கள், வக்கீல்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன அதிகாரிகளி, ஐ.டி, பத்திரிகைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்காக வெளியூர்களில் இருநதும் மாணவர்கள் வந்து கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் முதலில் மாணவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். அதன்பின் ஆசிரியர்களின் வாழ்த்துரை நடந்தது. ஆசிரியர்களுக்கு பட்டுமலை, பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு அளித்து மாணவர்கள் சிறப்பித்தனர்.

மாணவர்கள் சார்பில் சுமார் ஒரு லட்ச ரூபாய்க்கு டேபிள், சேர் ஆகியவை பள்ளிக்கு வழங்கப்பட்டன.  பள்ளி நுழைவாயிலில் புதிதாக பெயர்ப் பலகையையும் மாணவர்கள் அமைத்துத் தந்தனர். மேலும், புதர் மண்டிக் கிடந்த பள்ளி விளையாட்டு மைதானத்தை மாணவர்க சீர்படுத்திக் கொடுத்தனர்.

தங்கள் ஆசிரியர்களுடன் நிகழ்ச்சிக்கு வந்த மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட பின் மதிய உணவு அருந்தினர்.

திருமண நாள், பிறந்தநாள் கொண்டாடிய மாணவர்கள் கேக் வெட்டினர். 

விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் வி.ஆர். ஞானப்பிரசாகம் செய்து கொடுத்தார்.

இனி வரும் காலங்களில் பள்ளிக்கு மேலும் உதவிகளை அடிக்கடி செய்து கொடுப்போம் என மாணவர்கள் உறுதி அளித்தனர்.