ஐபிஎல் 2021 - தற்போதைய அணிகளின் நிலவரம்

21 Jan 2021

ஐபிஎல் போட்டிகளுக்காக, ஒவ்வொரு அணியும் 33 வீரர்களை தங்கள் அணியில் வைத்துக் கொள்ளலாம். அதில் உள்நாட்டு வீரர்கள் 25 பேரும், வெளிநாட்டு வீரர்கள் 8 பேரும் இருக்க வேண்டும். 

ஒவ்வொரு அணியும் வீரர்களை ஏலத்தில் எடுக்க ஒதுக்கப்பட்ட தொகை 85 கோடி. தற்போது அவர்கள் தக்க வைத்துக் கொண்டுள்ள வீரர்களுக்காக செலவிழத்த தொகை போக மீதமுள்ள தொகையை இந்த ஆண்டிற்கான ஏலத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விடுவிக்கப்பட்ட வீரர்களுக்கேற்ப, உள்நாட்டு வீரர்கள், வெளிநாட்டு வீரர்களைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். ஒரு வெளிநாட்டு வீரரை விடுவித்திருந்தால் அவருக்குப் பதிலாக வேறொரு வெளிநாட்டு வீரரை மட்டுமே ஏலத்தில் எடுக்க வேண்டும். உள்நாட்டு வீரர்கள் மூன்று பேரை விடுவித்திருந்தால் அவர்களுக்குப் பதிலாக மூன்று பேரை மட்டுமே எடுக்க வேண்டும்.

இந்த ஆண்டிற்காக விடுவிக்கப்பட்ட வீரர்களின் பணமதிப்பில் அதிகத் தொகையை தங்கள் வசம் வைத்திருக்கும் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. அவர்கள் வசம் 53 கோடியே 20 லட்சம் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் தங்கள் வசம் தலா 10.75 கோடியை மட்டுமே வைத்துள்ளன. 

தற்போதுள்ள வீரர்களின் நிலவரப்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அதிகபசட்மாக 13 உள்நாட்டு வீரர்களைத் தேர்வு செய்யலாம். குறைந்தபட்சமாக சன் ரைசர்ஸ் அணி 3 வீரர்களை மட்டுமே தேர்வு செய்யலாம்.

வெளிநாட்டு வீரர்களைப் பொறுத்தவரையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அதிகபட்சமாக 5 வீரர்களையும், சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆகியவை தலா 1 வீரரை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.

மொத்த அணிகளிலும் தற்போது 139 உள்நாட்டு வீரர்களும், 42 வெளிநாட்டு வீரர்களும் தக்க வைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பிப்ரவரியில் நடைபெற உள்ள ஏலத்தின் மூலமாக 61 உள்நாட்டு வீரர்களும், 22 வீரர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். தற்போது விடுவிக்கப்பட்ட வீரர்கள் மீண்டும் ஏலத்தின் மூலமே தேர்ந்தெடுக்கப்படுவர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

தற்போதுள்ள வீரர்கள் - 18
வெளிநாட்டு வீரர்கள் - 7
செலவிட்ட தொகை - 62.10
இருப்புத் தொகை - 22.90
நிரப்ப வேண்டிய இடங்கள் - 7
வெளிநாட்டு வீரர் - 1

டெல்லி கேப்பிடல்ஸ்

தற்போதுள்ள வீரர்கள் - 19
வெளிநாட்டு வீரர்கள் - 6
செலவிட்ட தொகை - 72.09
இருப்புத் தொகை - 12.9
நிரப்ப வேண்டிய இடங்கள் - 6
வெளிநாட்டு வீரர்கள் - 2

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

தற்போதுள்ள வீரர்கள் - 16
வெளிநாட்டு வீரர்கள் - 3
செலவிட்ட தொகை - 31.8
இருப்புத் தொகை - 53.2
நிரப்ப வேண்டிய இடங்கள் - 9
வெளிநாட்டு வீரர்கள் - 5

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

தற்போதுள்ள வீரர்கள் - 17
வெளிநாட்டு வீரர்கள் - 6
செலவிட்ட தொகை - 74.25
இருப்புத் தொகை - 10.75
நிரப்ப வேண்டிய இடங்கள் - 8
வெளிநாட்டு வீரர்கள் - 2

மும்பை இந்தியன்ஸ்

தற்போதுள்ள வீரர்கள் - 16
வெளிநாட்டு வீரர்கள் - 4
செலவிட்ட தொகை - 69.65
இருப்புத் தொகை - 15.35
நிரப்ப வேண்டிய இடங்கள் - 7
வெளிநாட்டு வீரர்கள் - 4

ராஜஸ்தான் ராயல்ஸ்

தற்போதுள்ள வீரர்கள் - 17
வெளிநாட்டு வீரர்கள் - 5
செலவிட்ட தொகை - 50.15
இருப்புத் தொகை - 34.85
நிரப்ப வேண்டிய இடங்கள் - 8
வெளிநாட்டு வீரர்கள் - 3

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

தற்போதுள்ள வீரர்கள் - 12
வெளிநாட்டு வீரர்கள் - 4
செலவிட்ட தொகை - 49.1
இருப்புத் தொகை - 35.90
நிரப்ப வேண்டிய இடங்கள் - 13
வெளிநாட்டு வீரர்கள் - 4

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

தற்போதுள்ள வீரர்கள் - 22
வெளிநாட்டு வீரர்கள் - 7
செலவிட்ட தொகை - 74.25
இருப்புத் தொகை - 10.75
நிரப்ப வேண்டிய இடங்கள் - 3
வெளிநாட்டு வீரர்கள் - 1

Tags: ipl 2021, chennai super kings, csk

Share via: