6 அறிமுக கிரிக்கெட் வீரர்களுக்கு ஜீப் பரிசு தரும் ஆனந்த் மகேந்திரா

23 Jan 2021

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தை சாதனை வெற்றியுடன் முடித்துக் கொண்டு திரும்பியது.

அங்கு நடைபெற்ற ஒரு நாள் போட்டித் தொடரை இழந்தாலும், டி 20 மற்றும் டெஸ்ட் தொடரை வென்றது. அதிலும், குறிப்பாக டெஸ்ட் தொடர்களில் அறிமுகமான இளம் வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வெல்ல காரணமாக இருந்தனர்.

அப்படி சிறப்பாக விளையாடிய அறிமுக வீரர்களான ஷர்துல் தாக்கூர், சுப்மான் கில், முகம்மது சிராஜ், நடராஜன், வாஷிங்டன் சுந்தர், நவ்தீன் சைனி ஆகியோருக்கு தங்கள் நிறுவனத்தின் ‘தார் எஸ்யுவி’ மாடல் ஜீப்பைப் பரிசாக வழங்குவதாக அந்நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா அறிவித்துள்ளார்.

அது பற்றி டிவிட்டரில், “இந்திய, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே சரித்திர சாதனை படைத்த அணியின் ஆறு இளைஞர்கள் அறிமுகமானார்கள். (ஷர்துல் இதற்கு முன் அறிமுகமாகியிருந்தாலும் காயம் காரணமாக அது குறுகியதாகவே இருந்தது). இந்தியாவின் எதிர்கால தலைமுறை இளைஞர்கள் கனவு காணவும், முடியாததை சாத்தியமாக்கவும்....

அவர்களது கதைகள் எழுச்சிக் கதைகள், சிறப்பை வெளிப்படுத்த அச்சுறுத்தலை எதிர்கொண்டு சமாளித்தார்கள். வாழ்க்கையில் அனைத்து விஷயங்களிலும் ஒரு உத்வேகத்தைக் கொடுத்தார்கள். 

அறிமுகமான ஒவ்வொருவருக்கும் எனது சொந்த கணக்கில் இருந்து புத்தம் புதிய ‘தார் எஸ்யுவி’ பரிசாக வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இளைஞர்கள் தங்களை நம்பும்படி அறிவுறுத்தவே இந்த பரிசுக்கான காரணம். முகம்மது, ஷர்துல், சுப்மான், நடராஜன், நவ்தீப், வாஷிங்டன், மகேந்திரா ஆட்டோவிடம் கேட்கிறேன், ‘தார்’ஐப் பெற அவர்களுக்கு முன்னுரிமை தாருங்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Tags: cricket, india, australia, anand mahindra, mahendra

Share via: