ஐபிஎல் 2021 - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் யார் ? யார் ?

20 Jan 2021

ஐபிஎல் 2021ம் ஆண்டிற்கான தங்களது வீரர்கள் யார், யார் என்பதை அணிகள் முடிவு செய்வதற்கான கடைசி தேதி இன்றுடன் முடிவடைந்தது.

அதன்படி ஒவ்வொரு அணியும் அவர்கள் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் யார், விடுவித்த வீரர்கள் யார் என்பதை இன்று அறிவிக்க வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய அணி பட்டியலை சற்று முன் வெளியிட்டுள்ளது.

கடந்த 13 சீசன்களாக சென்னை அணியில் விளையாடி வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடியவருமான முரளி விஜய் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் பியுஷ் சாவ்லா, கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், மோனு குமார் சிங் ஆகியோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த சீசனுடன் ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் அறிவித்ததால் அவரும் அணியில் இடம் பெறவில்லை.

சென்னை அணிக்காக தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்கள்...

தோனி, ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, டுபிளிசிஸ், சாம் கர்ரன், பிராவோ, ஹேசல்வுட், லுங்கி நெகிடி, அம்பாதி ராயுடு, கரண் சர்மா, மிட்செல் சாட்னர், ஷர்துல் தாக்கூர், ருத்துராஜ் கெய்க்வாட், ஜெகதீசன், இம்ரான் தாஹிர், தீபக் சஹர், ஆசிப், சாய் கிஷோர்

விடுவிக்கப்பட்ட ஆறு வீரர்கள் மூலம் சென்னை அணிக்கு தற்போது  7.80 கோடி (கேதார் ஜாதவ்),  6.75 கோடி (பியுஷ் சாவ்லா), 4 கோடி (ஷேன் வாட்சன்), 2 கோடி (முரளி விஜய்), 2 கோடி (ஹர்பஜன் சிங்), 20 லட்சம் (மோனு குமார் சிங்)  என மொத்தமாக 24 கோடியே 75 லட்ச ரூபாய் கிடைக்க உள்ளது. அத் தொகைக்கு இந்த வருடத்திற்கான மேலும் சில புதிய வீரர்களை எடுக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

அணிக்குத் தேவையான விதத்தில் அந்தப் பணத்தில்  சென்னை அணி வீரர்களைத் தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: ipl 2021, chennai super kings, csk

Share via: