கிரிக்கெட் - இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

19 Jan 2021

இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட், டி 20, ஒரு நாள் போட்டிகள் அடங்கிய தொடரை விளையாட இந்தியாவில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சுற்றுப் பயணம் செய்ய உள்ளது.

அதற்காக, முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய தொடரில் நெட் பந்துவீச்சாளராகச் சென்று அடுத்தடுத்து ஒரு நாள், டி 20, டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜனுக்கு டெஸ்ட் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு ஐந்து டி 20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ளதை அடுத்து இந்த முடிவை தேர்வுக்குழுவினர் எடுத்துள்ளனர். மேலும், ஐபிஎல் போட்டிகள் முடிந்ததும் தனக்குப் பிறந்த குழந்தையைக் கூடப் பார்க்காமல் நேரடியாக ஆஸ்திரேலியா சென்று விட்ட நடராஜன் குடும்பத்தினருடன் கொஞ்சம் ஓய்வெடுக்கவும் அவருக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

இந்திய அணி விவரம்

விராட் கோலி (கேப்டன்), ரகானே (துணை கேப்டன்), ரோகித் சர்மா, சுப்மான் கில், மாயன்க் அகர்வால், புஜாரா, ரிஷாப் பந்த், விருத்திமான் சகா, ஹர்திக் பான்டியா, கேஎல் ராகுல், பும்ரா, இஷாந்த் சர்மா, முகம்மது சிராஜ், ஷர்துல் தாக்கூர், அஷ்வின், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல்

ஸ்டான்ட்பை வீரர்கள்

கேஎஸ் பரத் (கீப்பர்), அபிமன்யு ஈஸ்வரன், ஷபாஸ் நதீம், ராகுல் சஹர், பிரியன்க் பன்சல்

நெட் பௌலர்கள்

அன்கித் ராஜ்புத், அவேஷ் கான், சந்தீப் வாரியர், கே கௌதம், சௌரப் குமார்

போட்டித் தொடர் விவரம்

முதல் டெஸ்ட்

பிப்ரவரி 5 - 9, சென்னை

இரண்டாவது டெஸ்ட்

பிப்ரவரி 13 - 17, சென்னை

மூன்றாவது டெஸ்ட் (பகலிரவு)

பிப்ரவரி 24 - 28, அகமதாபாத்

நான்காவது டெஸ்ட்

மார்ச் 4 - 8, அகமதாபாத்

முதல் டி 20

மார்ச் 12, அகமதாபாத்

இரண்டாவது டி 20

மார்ச் 14, அகமதாபாத்

மூன்றாவது டி 20

மார்ச் 16, அகமதாபாத்

நான்காவது டி 20

மார்ச் 18, அகமதாபாத்

ஐந்தாவது டி 20

மார்ச் 20, அகமதாபாத்

முதல் ஒரு நாள் (பகலிரவு)

மார்ச் 23, புனே

இரண்டாவது ஒரு நாள் (பகலிரவு)

மார்ச் 26, புனே

மூன்றாவது ஒரு நாள் (பகலிரவு)

மார்ச் 28, புனே

Tags: cricket, india, england, chennai, pune, ahmedabad

Share via: