சென்னையில் கொரானோவிற்கு சித்த சிகிச்சை மையம்

11 May 2021

தமிழ்நாட்டில் கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சித்த சிகிச்சை மையத்தை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 70 படுக்கை வசதிகளுடன் கூடிய 2வது சித்தா சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் 70 படுக்கை வசதிகளுடன் கூடிய அலோபதி சிறப்பு கொரானோ சிகிச்சை மையம் ஆகியவைற்றைத் திற்நது வைத்து அங்கு வைக்கப்பட்டுள்ள மருந்துகளைப் பார்வையிட்டார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags: tamilnadu, mk stalin

Share via: