முதலமைச்சர் நிவாரண நிதிக்கு முதல்வர் வேண்டுகோள்
11 May 2021
தமிழ்நாட்டில் தற்போது கொரானோ பேரிடர் காலத்தில் மக்களின் நலனுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
பேரிடர் காலத்தில் அளிக்கப்படும் நிதி கொரானோ நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
பெறப்படும் நன்கொடை, மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் அனைத்தும் பொதுவெளியில் வெளியிடப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான வங்கிக் கணக்கையும், காசோலை மூலம் செலுத்த வேண்டிய முகவரியையும் அவர் வெளியிட்டுள்ளார்.
வெளிநாடு வாழ் மக்கள் பயன்படுத்த வேண்டிய வங்கிக் கணக்கு விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.
நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் பிரிவு 80 (எ)-ன் கீழ் 100 சதவீத வரிவிலக்கு உண்டு.
அனைத்து நன்கொடைகளுக்கும் உரிய இரசீதுகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: tamilnadu, mk stalin