நடிகர் விஷால் அவர்கள் நடித்து வரும் "மார்க் ஆண்டனி" திரைப்படத்தின் சண்டைக்காட்சி  பூந்தமல்லியில் உள்ள 'ஈவிபி' பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அப்போது, அங்கு பிரபாசங்கர் என்பவருக்கு தீ காயங்கள் ஏற்பட்டது. இதனால் தனது வீட்டில் சிகிச்சைப் பெற்று வருகிறார். தொடர்ந்து பிரபாசங்கர் கஷ்டப்படுவதை அறிந்த நடிகர் விஷால் தனது தேவி அறக்கட்டளை சார்பில் பிரபாசங்கரின் குடும்பத்திற்கு ரூபாய் 50,000 தொகையை மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும்  திருவள்ளூர் மாவட்ட மக்கள் நல இயக்கத்தின் தலைவர் கண்ணன் ஆகியோர்கள் அவரது வீட்டிற்குச் சென்று வழங்கினார்கள்.