ஆயுர்வேத சிகிச்சை - கொரானோவிலிருந்து குணமடைந்த விஷால்

25 Jul 2020

கொரானோ நோய் தொற்று தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு பிரபலத்தையும் பாதிக்கவில்லை என்றுதான் நினைத்திருந்தோம்.

ஆனால், கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டு சத்தமில்லாமல் ஆயுர்வேத சிகிச்சை பெற்று அதிலிருந்து குணமடைந்து வந்திருக்கிறார் நடிகர் விஷால்.

அது பற்றி டிவிட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது,

“ஆமாம், உண்மைதான். என்னுடைய அப்பாவிற்கு பாசிட்டிவ் என சோதனை முடிவு வந்தது. அப்பாவிற்கு உதவி செய்ததால் எனக்கும் அதிக ஜுரம், சளி, இருமல் வந்தது. எனது மேனேஜேருக்கும் வந்தது.

நாங்கள் அனைவரும் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டோம், ஒரு வாரத்திற்குள் அபாய கட்டத்திலிருந்து தாண்டினோம். நாங்கள் தற்போது ஆரோக்கியமாக உள்ளோம். 

இதைப் பகிர மகிழ்ச்சிதான்,” எனத் தெரிவித்துள்ளார்.

Tags: corona, vishal

Share via: