‘பிக் பாஸ்’ பற்றி அதிர்ச்சி கேள்வி கேட்ட ஓவியா
25 Jul 2020
விஜய் டிவியில் 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிரம்மாண்டமான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் அந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு பெரும் புகழ் பெற்றவர் ஓவியா.
அதற்கு முன் அவர் சினிமாவில் நடித்திருந்தாலும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிதான் ஓவியாவை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு போய் சேர்த்தது. மேலும், ஓவியாவின் குணத்தைப் பார்த்து ரசிகர்கள் ஓவியா ஆர்மி என சமூக வலைத்தளங்களில் ஆரம்பிக்கும் அளவிற்கு அவர் புகழ் பெற்றார்.
கொரானோ தொற்று காரணமாக இந்த வருடத்திற்கான பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்குமா, நடக்காதா என்பது சந்தேகமாகவே உள்ளது.
இந்நிலையில் டிவிட்டரில் சற்று முன்னர் ஒரு அதிர்ச்சியான கேள்வியைக் கேட்டுள்ளார் ஓவியா.
’‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை தடைய செய்ய வேண்டும் என்பதை ஆதரிக்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா” எனக் கேட்டுள்ளார்.
ஓவியா தன்னை வளர்த்த நிகழ்ச்சியைப் பற்றியே இப்படி கேட்டிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
Tags: vijay tv, oviya, biggboss