‘விஜயானந்த்’ டீசர் தமிழில் வெளியீடு, தயாரிப்பாளர் மகிழ்ச்சி

02 Aug 2022

இந்திய அளவில் பிரபலமான கன்னட தொழிலதிபர் விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கை வரலாற்றுப்படம் ‘விஜயானந்த்’ என்ற பெயரில் தயாராகி உள்ளது. 

மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழிலும் வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ் டீஸரை படக்குழுவினர் இன்று ஆகஸ்ட் 2 காலை 10.05க்கு வெளியிட்டனர்.

புகழ்பெற்ற VRL குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் மற்றும் விளம்பரதாரர் லாஜிஸ்டிக்ஸ், மீடியா மற்றும் பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர் டாக்டர்.ஆனந்த் சங்கேஷ்வர், , இப்போது "விஆர்எல் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ்". என்கிற பெயரில் சொந்த படத்தயாரிப்பு நிறுவனமும் தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்புதான் ‘விஜயானந்த்’.

இது பற்றி அவர் கூறுகையில்,

”எங்கள் தயாரிப்பு நிறுவனம் ’விஜயானந்த்’ என்ற முதல் திரைப்பட முயற்சியை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இது ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படம். என் தந்தையும் மரியாதைக்குரிய பிரபல தொழில் அதிபருமான விஜய் சங்கேஷ்வர், 1976ல்  ஒரு சிங்கிள் டிரக் மூலம் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியவர். இன்று தேசம் முழுக்க அறியப்பட்ட பிரபல தொழிலதிபர். 

சிறிய அளவில் தொடங்கி வளர்ந்த அவரது வளர்ச்சிப் பாதையில் ஒரு வாரிசாக ஆனந்த் சங்கேஷ்வராகிய நானும் இடம் பெறுகிறேன் என்பதில் எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் இப்படத்தை தமிழிலும் வெளியிடுவது உள்ளபடியே பெருமிதமாக உணர்கிறேன். ஒருவரது வரலாற்றுப் படம் மற்ற மொழிகளில் டப் ஆகி வெளிவருவது என்பது இதுவே முதல்முறை. அந்தப் பெருமையை எங்கள் ‘விஜயானந்த்’ தட்டிச் செல்வதில் எங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி,”என்கிறார்.

இதற்கு முன் ’டிரங்க்’ என்ற ஹாரர் திரில்லர் படத்தை இயக்கிய ரிஷிகா சர்மா இப்படத்தை இயக்கியுள்ளார்.  ‘ட்ரங்க்’ படத்தின் நாயகன் நிஹால், விஜய் சங்கேஷ்வராக நடிக்கிறார். மற்றும் அனந்த் நாக், வினயா பிரசாத், வி ரவிச்சந்திரன், பிரகாஷ் பெலவாடி, அனிஷ் குருவில்லா, சிரி பிரஹலாத் மற்றும் பரத் போபண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
 
‘பெங்களூர் டேஸ், உஸ்தாத் ஹோட்டல், கீதா கோவிந்தம், மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

Tags: Vijayanand, Anand Sankeshwar, Rishika Sharma, Nihal, V Ravichandran, Gopi Sundar

Share via: