பிப்ரவரி 13ல் ‘மை லார்ட்’ ரிலீஸ்

02 Feb 2026

ராஜு முருகன் இயக்கத்தில், சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படமான ‘மை லார்ட்’ பிப்ரவரி 13ம் தேதி உலகம்முழுவதும் தியேட்டர்களில் வெளியாகிறது.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுகபாரதி பாடல்களை எழுத,  ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி.ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை  எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைக்கிறார்கள். 

அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சுரண்டலை ‘சட்டயர்’ (Satire) பாணியில் விவரிப்பதுடன் பேமிலி என்டர்டெய்னராகவும் தயாராகி இருக்கிறது. ஏழை எளிய மக்கள் மீது நடைபெறும் அதிகார அத்துமீறல் தொடர்பான காட்சிகள் அரசியல் நையாண்டியுடன் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதும்,  அன்பான குடும்ப உறவுகள் குறித்த விசயங்களை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது. 

இந்தத் திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்க, அம்பேத்குமார் வழங்குகிறார். தமிழகம் முழுவதும் ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது.

இப்படத்தின் டிரைலர் வெளியாகி ஏழரை மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ‌

 

Tags: my lord, raju murugan, sasikumar

Share via: