‘வாடிவாசல்’ மீண்டும் ஒரு அறிவிப்பு

15 Jan 2025

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் அறிவிப்பை இன்று அதன் தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார்.

எக்ஸ் தளத்தில், “"அகிலம் ஆராதிக்க 'வாடிவாசல்' திறக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன் பின் டெஸ்ட் ஷுட் எடுத்தது பற்றிய அறிவிப்பும் வந்தது. ஆனால், படப்பிடிப்பு கடந்த நான்கு வருடங்களாக ஆரம்பமாகாமல் இருந்து வந்தது. வெற்றிமாறனும், சூர்யாவும் வெவ்வேறு படங்கள் பக்கம் போய்விட்டார்கள்.

இன்றைய அறிவிப்பை அடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

Tags: vadivasal, suriya, vetrimaran

Share via: