‘உறியடி’ விஜயகுமார் நடிக்கும் புதிய படம் படப்பிடிப்பு நிறைவு
03 Jul 2022
ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்து வரும் புதிய ஆக்சன் படத்தை அறிமுக இயக்குநர் அப்பாஸ் அ. ரஹமத் இயக்குகிறார்.
'உறியடி' படத்தின் இரண்டு பாகங்களிலும் கதாநாயகனாக நடித்த நடிகர், இயக்குநர் விஜய்குமார் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள்.
விஜய்குமார் நடித்த 'உறியடி 2' படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்தது என்பதும், 'சூரரைப் போற்று' படத்தின் வசனத்தை விஜய்குமார் எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags: vijayakumar, abbas rahmad