கொரானோ தடுப்பூசி போட்டுக் கொண்ட உதயநிதி ஸ்டாலின்
12 May 2021
நடிகரும், சேப்பாக்கம் - திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரானோ தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
மேலும், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
“கொரோனா தடுப்பின் முக்கிய ஆயுதம் தடுப்பூசி. முதல் தவணை கொரோனா தடுப்பூசியை இன்று போட்டுக்கோண்டேன். கொரோனாவை வெல்ல தடுப்பூசி மட்டுமே நம் முன்னிருக்கும் ஒரே வாய்ப்பு. எனவே, பொதுமக்கள் அனைவரும் தயங்காமல் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுங்கள். முகக்கவசம் அணியுங்கள்.நன்றி,” என டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்,.
Tags: udhayanidhi stalin,