முதலமைச்சர் நிவாரண நிதி - சிவகுமார் குடும்பம் 1 கோடி நிதி
12 May 2021
தமிழ்நாட்டில் கொரானோ பேரிடரை சமாளிக்க முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுவீர், பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும், நன்கொடை - செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதைத் தொடர்ந்து இன்று மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நடிகர் சிவகுமார், அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் சந்தித்து 1 கோடி ரூபாயை நிதியாக வழங்கினார்கள். அப்போது தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியனும் உடனிருந்தார்.
தமிழ் சினிமா பிரபலங்களில் சிவகுமார் குடும்பத்தினர் முதன் முதலாக முதலமைச்சல் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நிதியுதவி அளித்துள்ளனர். அவர்களைப் போலவே மற்ற சினிமா நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் பலரும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து இந்த கொரானோ பேரிடரிலிருந்து தமிழக மக்களைக் காக்க உதவி புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags: suriya, karthi, sivakumar