முதல்வர் நிவாரண நிதிக்கு லைகா வழங்கிய 2 கோடி
19 Jun 2021
கொரானோ தொற்று பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையை சமாளிக்க தமிழ்நாடு முதல்வர் மக்களை முதல்வரின் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கும்படி கேட்டுக் கொண்டார்.
அதையடுத்து சில சினிமா நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகைகள் நிதி வழங்கினர்.
தமிழ்த் திரையுலகத்தில் பிரம்மாண்டமான படங்களைத் தயாரித்து வரும் முன்னணி நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் முதல்வரின் நிவாரண நிதிக்கு 2 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.
லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் சார்பில் அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச்ரா ஆகியோர் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். அப்போது சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.
Tags: mk stalin, lyca, lyca productions