‘தலைவி’ - படப்பிடிப்பு இன்றுடன் நிறைவு

12 Dec 2020

வைப்ரி மீடியா, கர்மா மீடியா அன்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில், கங்கனா ரணவத், அரவிந்த்சாமி, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘தலைவி’.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிந்ததாக படத்தில் ஜெயலலிதாக கதாபாத்திரத்தில் நடிக்கும் கங்கனா ரணவத் நெகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.

“எங்களது பெரும் லட்சியப்படமான ‘தலைவி - புரட்சித்தலைவி’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது. ஒரு நடிகைக்கு எப்போதாவதுதான் இப்படி ரத்தமும், சதையுமாக ஒரு படம் அமையும். அதில் நான் காதலுடன் விழுந்துவிட்டேன். கடினமாகத்தான் உள்ளது, இப்போது எதிர்பாராமல் ‘பை’ சொல்ல வேண்டிய நேரம். 

வாழ்நாளில் ஒரே முறை கிடைக்கும் ஒரு வாய்ப்பு, குழுவின் ஒவ்வொரு அற்புதமான உறுப்பினருக்கும் நன்றி, நன்றி,” என கங்கனா மனப்பூர்வமாய் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

Tags: thalaivi, kangana ranaut, vijay, jayalalitha

Share via: