‘ராங்கி’ - பனித்துளி...சிங்கிள் பாடல் டிசம்பர் 15 வெளியீடு
12 Dec 2020
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சரவணன் இயக்கத்தில், சத்யா இசையமைப்பில், த்ரிஷா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘ராங்கி’.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. விரைவில் இதன் இசை வெளியாக உள்ளது.
முதலில் சத்யா இசையில், கபிலன் எழுதி, சின்மயி பாடிய, ‘பனித்துளி....’ என்ற சிங்கிள் பாடலை டிசம்பர் 15ம் தேதி வெளியிட உள்ளார்கள். அதற்கடுத்து மற்ற பாடல்களும் வெளியாகும்.
2021ம் ஆண்டின் துவக்கத்தில் ‘ராங்கி’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags: raangi, saravanan, sathya, trisha