‘சியான்கள்’ - சிங்கிள் டிராக் வெளியீடு

12 Dec 2020

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் வித்தியாசமான மாறுபட்ட கதைகளில் படங்கள் வெளியாவது என்பது மிக மிகக் குறைவு. 

அந்த வரிசையில் இந்த வருடம் டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வித்தியாசமான கதைக் களத்ளோடு வெளியாக உள்ள படம் ‘சியான்கள்’.. 

வைகறை பாலன் இயக்க கரிகாலன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அவரே கேஎல் ப்ரொடக்சன் நிறுவனத்தின் சார்பாக  தயாரிக்கவும் செய்துள்ளார். 

முத்தமிழ் என்பவர் இந்த படத்திற்கு இசையமைக்க பாபு குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மப்பு ஜோதிகுமார் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

தற்போது இந்த படத்திலிருந்து வீடியோ பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

Tags: chiyangal

Share via: