எஸ்.பி.சினிமாஸோடு கைகோர்க்கும் ராஜுமுருகன்!
01 Oct 2023
இயக்குநர் ராஜூமுருகனுடன் எஸ்.பி.சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் கதையம்சமிக்க புதிய திரைப்படம்.
பல வெற்றிப்படங்களைக் கொடுத்த தமிழ் சினிமாவின் மதிப்பு மிக்க தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான எஸ்.பி. சினிமாஸ் தங்களின் புதிய படம் குறித்தான அறிவிப்புடன் வந்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் ராஜூமுருகனுடன் இணைந்து அவர்கள் தயாரிக்கிறார்கள்.
நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தொடர்ந்து தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனம் வெற்றிப் பட இயக்குநருடன் இணைந்து புதிய படம் தயாரிக்கும் போது நிச்சயம் அது தரமானதாகவும் வெற்றிகரமானதாகவும் அமையும். அப்படியொரு தரமாம படைப்பாக எஸ்.பி. சினிமாஸ் இயக்குநர் ராஜூமுருகனுடன் இணைந்து தயாரிக்க இருக்கும் படம் அமைய இருக்கிறது
Tags: SP cinemas, raju murugan