முதலில் '2018' இயக்குநர் படம்: சிம்பு திட்டம்

30 Jul 2024

முதலில் ஜுடு ஆண்டனி ஜோசப் படத்தினை  தொடங்க முடிவு செய்துள்ளார் சிம்பு.

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘தக் லைஃப்’. இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்து வருகின்றன. இந்தப் படத்துக்குப் பிறகு சிம்புவின் படம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல் வெளியாகி வருகின்றன.

தற்போது, தனது அடுத்த படத்தினை முடிவு செய்துவிட்டார் சிம்பு. செப்டம்பரில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. மாபெரும் வரவேற்பு பெற்ற ‘2018’ மலையாள படத்தின் இயக்குநர் ஜுடு ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகிறது.

இதன் தயாரிப்பாளராக ஏஜிஎஸ் நிறுவனம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்தப் படத்தின் பட்ஜெட் உள்ளிட்ட விவரங்கள் கூடிய இறுதிகட்டப் பேச்சுவார்த்தை வரும் வாரத்தில் நடைபெறவுள்ளது. இது முடிந்தவுடன் சிம்பு - ஜுடு ஆண்டனி ஜோசப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.

ஜுடு ஆண்டனி ஜோசப் படத்தினை முடித்து விட்டுத் தான் தேசிங்கு பெரியசாமி படத்தினை தொடங்கவுள்ளார் சிம்பு.

Tags: simbu

Share via: