’ரஜினி 174’ இயக்குநர் முடிவானது

30 Jul 2024

‘ரஜினி 174’ படத்தின் இயக்குநரை முடிவு செய்து, தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’கூலி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகீர் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள்.

‘கூலி’ படத்துக்குப் பிறகு ரஜினி தனது அடுத்த படத்தினை முடிவு செய்துவிட்டார். இதனை மாரி செல்வராஜ் இயக்க இருக்கிறார். இது தொடர்பான கதை முடிவாகி, பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டது. தற்போது தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக லலித்திடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். இது தொடர்பாக சம்பளம், படப்பிடிப்பு செலவு உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கு லலித் ஒ.கே சொல்லிவிட்டால் உடனடியாக பணிகள் தொடங்கப்படும். 

அதற்குள் ‘பைசன்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பையும் முடித்து கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார் மாரி செல்வராஜ்.

Share via: