’ஜெயிலர் 2’வை உறுதி செய்த யோகி பாபு
30 Jul 2024
‘ஜெயிலர் 2’ படம் உருவாக இருப்பதை உறுதிச் செய்திருக்கிறார் யோகி பாபு.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்ட இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்துக்குப் பிறகு நெல்சனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதனிடையே, ‘ஜெயிலர் 2’ கதையினை உருவாக்கி இருக்கிறார் நெல்சன் என்ற தகவல் மட்டும் வெளியானது. தற்போது இதை உறுதி செய்திருக்கிறார் யோகி பாபு. ‘போட்’ படத்தினை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் “தொடர்ச்சியாக நெல்சனோடு பணிபுரிந்து வருகிறேன். ‘ஜெயிலர் 2’ படத்தில் கூட முக்கிய கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கி வருகிறார். ” என்று தெரிவித்திருக்கிறார் யோகி பாபு.
இதன் மூலம் ‘ஜெயிலர் 2’ உருவாக இருப்பது உறுதியாகி இருக்கிறது. முதல் பாகத்தின் முடிவின்படி இதில் ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யாகிருஷ்ணன், மிர்ணா உள்ளிட்டோர் நடிப்பது உறுதி என்று கூறலாம்.
Tags: yogi babu, jailer