மீண்டுமொரு இந்தி படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம்

31 Jul 2024

’ஸ்கை போர்ஷ்’ இந்தி படத்துக்கு பின்னணி இசையமைக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 ‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக்கான ‘சர்ஃபிரா’ படம் படுதோல்வியை தழுவியது. யாருமே இந்தளவுக்கு தோல்வியை தழுவும் என்ற எதிர்பார்க்கவில்லை. இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதனை வைத்து மீண்டும் ஒரு இந்தி படத்துக்கு இசையமைக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சந்தீப் கேவ்லானி மற்றும் அபிஷேக் அனில் கபூர் ஆகியோரது இயக்கத்தில் அக்‌ஷய் குமார், சுனில் ஷெட்டி, சாரா அலிகான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஸ்கை போர்ஷ்’. அக்டோபர் 2-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது.

இதன் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ’சர்ஃபிரா’ பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பை வைத்து இந்த வாய்ப்பு ஜி.வி.பிரகாஷுக்கு கிடைத்திருக்கிறது. இதன் பின்னணி இசைக் கோர்ப்பில் தற்போது தீவிரமாக பணிபுரிந்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.

இந்தப் படம் தவிர்த்து, கங்கணா ரணாவத் இயக்கி நடித்துள்ள ‘எமர்ஜென்சி’ இந்திப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: gv prakash

Share via: