சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், முன்னணி நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் “கேப்டன் மில்லர்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ்குமார் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. அவரது வருகை படத்தின் மீதான ஆவலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. 

நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் நடிகை பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.