நன்கொடை அளியுங்கள், ஷாரூக்கான் வேண்டுகோள்

14 May 2020

கொரானோ ஊரடங்கு காரணமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு அவர்களைத் தற்காத்துக் கொள்ள, PPE கிட்டுகள் மற்றும் சில மருத்துவ உபகரணங்கள் தேவைப்படுகிறது. அவற்றை வாங்குவதற்காக ஒவ்வொருவரும் நன்கொடை அளிக்க வேண்டுமென ஹிந்தி நடிகர் ஷாரூக்கான் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஷாரூக்கான் ஏற்கெனவே பல்வேறு நலத்திட்ட உதவிகளை இந்த கொரானோ ஊரடங்கு காலத்தில் அறிவித்துள்ளார்.

தற்போது சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், “கொரானோ வைரஸுக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தும் துணிச்சலான சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுக்களை ஆதரிப்போம். சிறிய உதவி கூட நீண்ட தூரம் பயணிக்க உதவும்,” என்று தெரிவித்துள்ளார்.

Tags: corono, covid 19, shahrukkhan

Share via: