ஏப்ரல் 14ல் வெளிவருகிறது மாஸ்டர் மகேந்திரனின் “ரிப்பப்பரி” !!

04 Apr 2023

ஏகே தி டால்ஸ்மேன் நிறுவனத்தின் சார்பில்  இயக்குநர் Na. அருண் கார்த்திக் தயாரித்து இயக்க,  மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் வித்தியாசமான ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரிப்பப்பரி”. தமிழ் சினிமாவின் முன்னணி திரைப் பிரபலங்கள் வெளியிட்ட இப்படத்தின்  டீசர்,  ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பிறகு மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார்.

லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் குட்டி பவானியாக கலக்கிய மகேந்திரன் இப்படத்தில் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 

கிராம பின்னணியில் யூடுயூப் குக்கிங் சேனல் நடத்தி வரும் மூன்று இளைஞர்களின் வாழ்வில் ஏற்படும் சம்பவங்களை பற்றியது தான் இப்படத்தின் கதை. 6 முதல் 60 வயது வரை அனைவரும் ரசிக்கும் வகையில் காமெடி டிராமா கலந்த, அசத்தலான ஹாரர் காமெடியாக இப்படம் உருவாகியுள்ளது. முக்கியமாக ஒரே வீட்டுக்குள் நடக்கிற  வழக்கமான ஹாரர் காமெடியாக இல்லாமல், மாறுபட்ட வித்தியாசமான திரைக்கதையில் நிறைய திருப்பங்களுடன் ரசிகர்களை அசத்த வருகிறது “ரிப்பப்பரி”  திரைப்படம். 

மாஸ்டர் மகேந்திரன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் ஆரத்தி பொடி, காவ்யா அறிவுமணி, ஶ்ரீனி, நோபிள் ஜேம்ஸ், மாரி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

AK THE TALESMAN நிறுவனத்தின் சார்பில்  இயக்குநர் Na. அருண் கார்த்திக் இப்படத்தினை தயாரித்து இயக்குகிறார். திவாரகா தியாகராஜன் இசையமைக்க, தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு செய்துள்ளார். முகேன் வேல் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.

ஏப்ரல் 14 ஆம் தேதி உலகமெங்கும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது “ரிப்பப்பரி” திரைப்படம்.

https://www.youtube.com/watch?v=9enOvTxzvBY 

Tags: ஆரத்தி பொடி, காவ்யா அறிவுமணி, ஶ்ரீனி, நோபிள் ஜேம்ஸ், மாரி ,  மாஸ்டர் மகேந்திரன்

Share via: