ரஜினிகாந்த் 50 - மம்முட்டி, மோகன்லால் வாழ்த்து
13 Aug 2025
இந்தியத் திரையுலகத்தின் உச்ச நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி ஆகஸ்ட் 15ம் தேதியுடன் 50 வருடங்கள் ஆகிறது.
அவருக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
மலையாள நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் இருவரும் ரஜினிக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
மம்முட்டி
அன்பு ரஜினிகாந்த் அவர்களுக்கு, சினிமாவில் 50 பொற்கால ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு மனதார வாழ்த்துகள். உங்களுடன் திரையில் இணைந்து நடித்தது மிகவும் பெருமையான அனுபவமாக அமைந்தது. கூலி, படத்திற்கு மிகச் சிறந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் எங்களை ஊக்குவிப்பவர் ஆகவும், பிரகாசமாகவும் வாழுங்கள்.
மோகன்லால்
திரையில் அபாரமான கவர்ச்சி, அர்ப்பணிப்பு மற்றும் மாயாஜாலத்தின் ஐம்பது ஆண்டுகள். இந்த பிரம்மாண்ட மைல்கல்லை அடைந்த ரஜினிகாந்த் சாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். கூலி, படத்திற்கு மற்றும் இன்னும் பல சிறப்பு நிகழ்வுகளுக்கு நல்வாழ்த்துக்கள்.
Tags: rajinikanth, mammooty, mohanlal