ரஜினிகாந்த் 50 - நண்பர் கமல்ஹாசன் வாழ்த்து

13 Aug 2025

இந்தியத் திரையுலகத்தின் உச்ச நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி ஆகஸ்ட் 15ம் தேதியுடன் 50 வருடங்கள் ஆகிறது.

அவருக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

ரஜினியின் நீண்ட கால நண்பரான கமல்ஹாசன் அவரது வாழ்த்தில், 

சினிமாவில் அரை நூற்றாண்டு சிறப்பை குறிக்கும் வகையில், எனது பிரியமான நண்பர் ரஜினிகாந்த்,  இன்று 50 பொற்கால ஆண்டுகளை சினிமாவில் கொண்டாடுகிறார். எங்கள் சூப்பர் ஸ்டாரை அன்பு மற்றும் பாராட்டுடன் நான் கொண்டாடுகிறேன்.

மேலும் ‘கூலி’ படத்திற்கு இந்த பொற்கால விழாவுக்கு ஏற்ப உலகளாவிய வெற்றியை வாழ்த்துகிறேன். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், திரையுலகின் தூண் கலாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் ஆதரவுடன், எப்போதும் புதுமையான அனிருத்தால் செம்மையாக்கப்பட்டு, எனது நீண்டகால நண்பர்கள் சத்யராஜ், நாகார்ஜுனா, அமிர்கான், உபேந்திரா மற்றும் சவுபின் ஷாகிர் ஆகியோரால் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனது பாசமான மகள் ஸ்ருதிஹாசனுக்கு சிறப்பு வாழ்த்துகள், தொடர்ந்து பிரகாசமாக விளங்குங்கள்,” என தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

Tags: rajinikanth, kamalhaasan

Share via: