சினிமா - பின் தயாரிப்புப் பணிகளுக்கு அரசு அனுமதி

08 May 2020

சினிமாவில் போஸ்ட் புரொடக்ஷன் என்று சொல்லக் கூடிய பின் தயாரிப்புப் பணிகளை வரும் மே 11ம் தேதி முதல் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களும், சின்னத் திரை தயாரிப்பாளர்களும் கொரானோ ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக எந்த பணியும் நடக்காதததால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகி உள்ளதால், இத்தருணத்தில் தயாரிப்புக்குப் பிந்தைய போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்வதற்காக மட்டும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

மேற்கண்ட தயாரிப்பாளர்களின் கோரிக்கை கனவிடன் பரிசீலித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கீழ்க்கண்ட தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளை மட்டும் 11.5.2020 முதல் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளார்கள்.

1.படத்தொகுப்பு (அதிகபட்சம் 5 பேர்)

2.குரல் பதிவு (அதிகபட்சம் 5 பேர்)

3. கம்ப்யூட்டர் மற்றும் விஷுவல் கிராபிக்ஸ் (10 முதல் 15 பேர்)

4.டிஐ எனப்படும் நிற கிரேடிங் (அதிகபட்சம் 5 பேர்)

6.ஒலிக்கலவை - அதிகபட்சம் 5 பேர்

எனவே, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை மேற்கொள்ளும் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள், இப்பணியில் ஈடுபடுகின்ற பணியாளர்களுக்கு உரிய அனுமதி சீட்டுகளை பெற்றுத் தந்து அவர்கள் சமூக இடைவெளியுடனும், முகக்கவசம மற்றும் கிருமி நாசினி உபயோகித்தும், மத்திய மாநில அரசுகுள் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளை பின்பற்றியும் பணி செய்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிவிப்புக்கு சினிமாத் துறையைச் சேர்ந்த பலரும் நன்றி தெரிவித்து வரு

Tags: tamil cinem, tamilnadu govt, tn govt

Share via: