ட்விட்டரில் காதல் உரையாடிய கார்த்தி & த்ரிஷா!
20 Mar 2023
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் , கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கிறது “பொன்னியின் செல்வன் 2”.
வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், த்ரிஷா மற்றும் கார்த்தி ட்விட்டர் உரையாடிய நிகழ்வு இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
அதில்,
Karthi - இளையபிராட்டி… hi
Karthi - என்ன பதிலே இல்லை
Trisha - என்ன வாணர்குல இளவரசே?
Karthi - தங்கள் தரிசனம் கிடைக்குமா ?
Trisha - ம்ம்ம்…யோசித்து செய்தி அனுப்புகிறேன்
Karthi - கடல் கடந்து சென்று உங்கள் ஆணையை நிறைவேற்றிவிட்டு வருபவனுக்கு மோரை மட்டும் கொடுத்து அனுப்பி விடமாட்டீர்களே.. ?
Trisha - வேறென்ன வேண்டும் வந்தியத்தேவருக்கு? கொடுத்த பொருளை திருப்பி கேட்கபோகுறீர்களா ?
Karthi - ஐயய்யோ என் உயிர் என்றுமே உங்களுடையது தேவி. நான் பழையாறை வந்ததும் நாம் vibe ஆக ஒரு பாடல் தயார் செய்ய சொல்லுங்களேன்….
Trisha - வீரரே பாடல் எப்போதோ ready மாலை 6 மணி வரை காத்திருங்கள்
Tags: ponniyin selvan, karthi, trisha,