பட்டாம்பூச்சி - ஜெய் இசையில் தேவா பாடும் ஜெயில் குத்து
21 Apr 2022
அவனி டெலி மீடியா சார்பாக குஷ்பு சுந்தர் தயாரிக்க, சுந்தர் சி கதாநாயகனாகவும், ஜெய் முதன் முறையாக வில்லனாகவும் நடித்துள்ள படம் ‘பட்டாம்பூச்சி’.
ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை பத்ரி எழுதி இயக்குகிறார். கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய நவநீத் சுந்தர் இசைஅமைகிறார் . எடிட்டிங் பணிகளை பென்னி ஆலிவர் மேற்கொள்கிறார். சண்டைப்பயிற்சி ராஜசேகர், திரைக்கதை நரு. நாராயணன், மகா கீர்த்தி.
1980களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதை. கொடூரமான சைக்கோ கொலைகாரன் கதாபாத்திரத்தில் ஜெய்யும், அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்கத் துடிக்கும் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் சுந்தர் சி யும் நடிக்கிறார்கள். முதல் காட்சியிலேயே விறுவிறுப்பாக துவங்கும் கதை இறுதிக்காட்சி வரை சீட் நுனியில் அமர வைக்கும் திரில்லராக உருவாகி உள்ளதாம்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. போஸ்டரைப் பார்த்தால் படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் விதமாக உள்ளதாக அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மே மாதம் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பு இப்போதிலிருந்தே துவங்கிவிட்டது. விரைவில் டீசர் மற்றும் பாடல் வீடியோ வெளியிடப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப் படத்தில் ஜெயில் காட்சியில் வரும் ஒரு கானா பாடலை ஜெய் இசையமைக்க, இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார். ‘ஏக்கு மாறு தோ துக்கடா வாங்கடா, ஜெயில்ல தவ்லத்தா வாழ்ந்து வரும் நாங்கடா,’ எனத் தொடங்கும் இந்தப் பாட்டுக்கு ஜெயில் குத்து என்று பெயரிட்டுள்ளனர் .
Tags: pattamboochi, badri, jai, deva, honeyrose