சுதா கோங்கரா இயக்கத்தில், சூர்யா, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் ‘சூரரைப் போற்று’.

இப்படத்தின் ஹிந்தி ரீமேக் படப்பிடிப்பு இன்று மும்பையில் ஆரம்பமானது. 

சூர்யாவின் 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இப்படத்தின் மூலம் ஹிந்தித் திரைப்படத் தயாரிப்பில் நுழைகிறது. அபுடான்டியா என்டர்டைன்மென்ட் மற்றும் கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன.

தமிழில் படத்தை இயக்கிய சுதா கோங்கரா ஹிந்தியிலும் இயக்குகிறார். அக்ஷய்குமார், ராதிகா மதன் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சதீஷ் படத்தொகுப்பு செய்ய, பிந்தியா மற்றும் அரவிந்த் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளைச் செய்கிறார்கள்.

இப்படத்தின் பூஜைக்காக கன்னியாகுமரியில் படப்பிடிப்பில் இருந்து மும்பை சென்று கலந்து கொண்டார் சூர்யா.

படத்தின் மற்ற நடிகர்கள், நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.