சந்தானம் நடிக்கும் ‘பாரிஸ் ஜெயராஜ்’

01 Dec 2020

அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம், தாரா அலிஷா பெரி மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த வெற்றிப் படம் ‘ஏ 1’.

மீண்டும் சந்தானம், இயக்குனர் ஜான்சன் இணையும் படமான ‘பாரிஸ் ஜெயராஜ்’ என்ற படத்தின் முதல் பார்வையை இன்று வெளியிட்டனர்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் என்ற பெயரின் சாயலில் ‘பாரிஸ் ஜெயராஜ்’ எனப் படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் நாயகியாக அனைகா நடிக்கிறார். இவர் ‘செம போத ஆகாதே, கீ’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர். 

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

2021 ஜனவரி மாதம் படத்தை வெளியிட உள்ளார்கள்.

Tags: parris jeyaraj, santhanam, anaika, johnson

Share via: