‘உப்பு கருவாடு’ படப்பிடிப்பு நிறைவு...
13 May 2015
“அழகிய தீயே, பொன்னியின் செல்வன், மொழி, அபியும் நானும், பயணம், கௌரவம்” போன்ற படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி படம் ‘உப்பு கருவாடு’.
ஃபர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ், நைட் ஷோ சினிமா தயாரிக்கும் இந்தப் படத்தில் கருணாகரன், நந்திதா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
குறிப்பிடத்தக்கப் படங்களை இயக்கியுள்ள ராதா மோகன், இந்தப் படத்தையும் ஒரு அகான படமாக இயக்கியுள்ளார். அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள் உதவியுடன் படத்தை மிகக் குறுகிய காலத்தில் எடுத்து முடித்துள்ளார்.
படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. விரைவில் படம் திரைக்கு வர உள்ளது என படத்தின் தயாரிப்பாளர் ராம்ஜி நரசிம்மன் கூறுகிறார்.

