கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’
02 May 2026
ஜீ ஸ்டுடியோஸ், டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் சார்பில், வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள “சத்தியவான் சாவித்திரி” படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு வழக்கை மையமாக வைத்து, திரில்லர் பாணியில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன், அனைவரும் ரசிக்கும் வண்ணம், ஒரு ஜனரஞ்சக படைப்பாக இப்படத்தை உருவாக்குகி வருகிறார் அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய்.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் எதிர் சீனியர் வழக்கறிஞராக மிஷ்கின் இணைந்து நடிக்கிறார். இவர்களுடன் ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன், மதுசூதனன், R சுந்தர்ராஜன், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா, மாலா பார்வதி, தீபா, A.வெங்கடேஷ், ராஜா ராணி பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
Tags: sathiyavan savithiri, keerthy suresh, mysskin

