புதுப்பிக்கப்பட்ட தரத்தில் ஓடிடியில் ‘மூன்றாம் பிறை’

01 May 2026

டி. ஜி. தியாகராஜன் மற்றும் ஜி. சரவணன் தயாரிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பாலுமகேந்திரா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், கமல்ஹாசன், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் ‘மூன்றாம் பிறை’.

1982ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை, தமிழ் சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் உணர்வுப்பூர்வமான கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாக இன்று வரை திகழ்கிறது. 

இந்தப் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தனது முதல் தேசிய விருதைப் பெற்றார் கமல்ஹாசன். சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருதைப் பெற்றார் பாலுமகேந்திரா. பிலிம்பேர் தென்னிந்தியாவின் சிறந்த இயக்குநர் விருது, பல தமிழக அரசு விருதுகள் உள்ளிட்ட பல்வேறு கௌரவங்களையும் பெற்றது. மேலும் இந்தியா முழுவதும் தொடர்ந்து ஒரு ஆண்டு காலம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி, அதன் மகத்தான வெற்றி மற்றும் நிலையான வரவேற்பை நிரூபித்தது.

40 வருடங்களைக் கடந்த பின்பும், தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக இந்தப் படம் இன்றும் ரசிக்கப்படுகிறது.  இப்படம் டிஜிட்டல் முறையில் தரம் உயர்த்தப்பட்டு இன்று முதல் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி உள்ளது.

Tags: moondram pirai, kamalhaasan, sridevi, ilaiyaraaja, balu mahendra, silk smitha

Share via: