செல்வராகவன் - சிம்பு படம் ஆரம்பம்
14 May 2015
“காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை” உட்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய செல்வராகவன் அடுத்து சிம்புவை நாயகனாக வைத்து இயக்கும் படம் இன்று ஆரம்பமானது.
குளோ ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் சித்தார்த் ராவ், கீதாஞ்சலி செல்வராகவன் இப்டத்தைத் தயாரிக்கின்றனர். இவர்களிரும் பள்ளித் தோழர்கள்.
இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா, டாப்ஸி ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.
தெலுங்கின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ஜெகதி பாபு முக்கிய வேடத்தில் நடிக்க, முன்னாள் கதாநாயகனான சுரேஷ் மற்றொரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
“காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை” ஆகிய படங்களில் வெற்றிக் கூட்டணியாக இருந்த செல்வராகவன் - யுவன்ஷங்கர் ராஜா மீண்டும் இந்தப் படம் மூலம் இணைகிறார்கள்.
அந்தக் கூட்டணியில் மற்றொருவரான ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவும் மீண்டும் இதில் இணைந்துள்ளார். ‘மதராசப்பட்டினம்’ படம் புகழ் செல்வகுமார் இப்படத்தின் கலை இயக்குனராகப் பணியாற்றுகிறார்.
இப்படத்தின் காட்சிகள் சென்னை புறநகர், ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளிலும் படமாக உள்ளன.

