காதலிக்க ‘டைம்’ இல்லை, தமன்னா தவிப்பு...

16 May 2015
ஒரு திருமணமாகாத நடிகரையோ, நடிகையையோ பேட்டி எடுக்கச் செல்லும் போது ஒவ்வொரு நிருபரும் கேட்கும் பொதுவான கேள்வி, ‘காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?’ என்பதாக இருக்கும். அப்படி இந்தக் கேள்விக்குத் தப்பித் தவறி பதிலளித்து விட்டார்கள் என்றால், உடனே அடுத்த கேள்வியைத் தயாராக வைத்திருப்பார்கள். ‘நீங்கள் யாரைக் காதலிக்கிறீர்கள் ?’ என்பதுதான் அடுத்த கேள்வியாக இருக்கும். இதனாலேயே பலரும் காதலைப் பற்றிய கேள்விக்கு அவ்வளவு விளக்கமாக பதிலளிப்பதில்லை. ஆனால், சமீபத்தில் சில பத்திரிகையாளர்கள் தமன்னாவிடம் காதலைப் பற்றிக் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வழக்கமான ஒன்றுதான். “நான் என்னுடைய நடிப்புத் தொழிலையும், என்னுடைய குடும்பத்தையும் அதிகமாகக் காதலிக்கிறேன். காதலிப்பதற்கெல்லாம் எனக்கு நேரமே இருப்பதில்லை. இப்போதைக்கு அவற்றை மட்டும்தான் காலித்துக் கொண்டிருக்கிறேன்,” எனச் சொல்லியிருக்கிறார். நடுவில் தமிழில் காணாமல் போயிருந்த தமன்னாவிற்கு ‘வீரம்’ படம் நல்ல ரீ என்ட்ரியாக அமைந்தது. இப்போது ‘வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தில் ஆர்யா ஜோடியாகவும், தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்தில் கார்த்தி ஜோடியாகவும் நடித்து வருகிறார். இந்த ஆண்டு முன்னணி ஹீரோயின்களில் போட்டியில் கண்டிப்பாக தமன்னாவும் இடம் பிடிப்பார்.

Share via: