சிம்புவுக்கு மேலும் ஒரு புது ஜோடி...
16 May 2015
கெளதம் மேனன் இயக்க சிம்பு, பல்லவி சுபாஷ் நடிக்க புதிய படம் ஒன்று கடந்த வருடம் ஆரம்பமானது. அதன் பின் கௌதம் மேனனுக்கு அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் சிம்பு படத்தை அப்படியே விட்டுவிட்டு அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தை இயக்கப் போய்விட்டார். இப்போது அந்தப் பழைய படத்தை தூசி தட்டி ‘அச்சம் என்பது மடமையடா’ என பெயர் வைத்து மீண்டும் ஆரம்பித்துள்ளார்கள். ஆனால், படத்தில் அப்போது நாயகியாக நடித்த பல்லவி சுபாஷ் படத்திலிருந்து விலகி விட்டார். அதனால் சிம்புக்காக வேறு ஒரு நாயகியை நடிக்க வைக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.
பல நடிகைகளைப் பார்த்த பிறகு மலையாள நடிகையான மஞ்சிமா மோகன் என்பவரை சிம்புவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகப்பபடுத்த உள்ளார் கௌதம் மேனன். மஞ்சிமா மோகன் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நாயகியாக உயர்ந்தவர். சமீபத்தில் வெளிவந்த ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ படத்தில் நாயகியாக நடித்தவர். இவர் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழுக்கு அறிமுகமாகும் அடுத்த அழகான மலையாள நடிகையான மஞ்சிமாவும் தமிழ் மக்கள் மனதில் கண்டிப்பாக இடம் பிடிப்பார் என்கிறார்கள்.
சிம்பு தற்போது நடித்துக் கொண்டிருக்கும் இரண்டு படங்களிலும் இரண்டு புது ஜோடிகள். செல்வராகவன் படத்தில் கேத்தரின் தெரேசா, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் மஞ்சிமா மோகன், இருவருமே மலையாள நடிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

