அஜித் அற்புதமான மனிதர் - ஸ்ருதிஹாசன்
24 May 2015
‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக முதன் முறையாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் சில நாட்களுக்கு முன்பிருந்து ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.
ஒரு சில நாட்களிலேயே அவரை அஜித் மிகவும் கவர்ந்துவிட்டார். உடனே அஜித்தைப் பற்றிய அவருடைய கருத்தை நேற்று டிவிட்டரில் பதிவிட்டுவிட்டார்.
“அஜித் ஒரு அற்புதமான மனிதர் மட்டுமல்ல, சிறப்பாக சமைப்பவரும் கூட. இந்தப் படத்தில் பணிபுரிவது ஒரு அழகான அனுபவம், #superhero #yummy” என தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களிலேயே இப்படி ஒரு பதிவு என்றால் இன்னும் படப்பிடிப்பு முடிவதற்குள் அஜித்தைப் பற்றிப் புகழ்ந்து கொண்டேயிருக்கப் போகிறார்.
அஜித் ஜோடியாக நடிப்பதற்காக நாகார்ஜுனா, கார்த்தி நடிக்கும் இரு மொழிப் படங்த்தை வேண்டாமென்று வந்தவராயிற்றே….இப்படிக் கூடப் பராட்டவில்லை என்றால் எப்படி….?

