மீண்டும் தசரா இயக்குனரோடு கைகோர்த்த நானி

31 Mar 2024

 


காதல் மற்றும் ஆக்ஷன் டிராமா ஜானரில் வெளியான தசரா திரைப்படம் கடந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக மாறியது. மேலும் நானி நடிப்பில் வெளியாகி அதிக வசூல் செய்த படமாகவும் தசரா அமைந்தது. இந்த நிலையில், தசரா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலாவுடன் புதிய படத்தில் இணைகிறார். நானி 33 என தற்காலிக தலைப்புடன் துவங்கப்பட்டு இருக்கும் இந்த படத்தை ஸ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் (எஸ்.எல்.வி. சினிமாஸ்) சார்பில் சுதாகர் செருக்குரி தயாரிக்கிறார்.

தசரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஸ்ரீகாந்த் ஒடேலா, முதல் படத்திலேயே அதிக வசூலை குவித்து நல்ல வரவேற்பை பெற்றார். தனது முதல் படத்திலேயே நானியை இதுவரை யாரும் பார்த்திராத அளவுக்கு வித்தியாசமாக வெளிப்படுத்தி இருந்தார்.

புதிய படம் தொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டரில் ரத்தம் தெறிக்க சிவப்பு நிறம் கொண்டிருக்கிறது. இதன் பின்னணியில் நானியின் முகம் மாசாக காட்சியளிக்கிறது. இத்துடன் அவர் சிகரெட் பிடிக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான போஸ்டரில், தலைவராக இருக்க அடையாளம் தேவையில்லை என்ற வாசகம் இடம்பெற்று இருக்கிறது.

முதல் போஸ்டரில் இருந்தே அடுத்த படம் ரத்தம் தெறிக்கும் வகையில் ஆக்ஷன் கதைக்களம் கொண்டிருக்கும் என்பதை படக்குழு தெரியப்படுத்தி இருக்கிறது. ஸ்ரீகாந்த் தனது அடுத்த படத்திலும் நானியை சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் காட்சிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த படத்தை பெரும் பொருட்செலவில் எடுக்க தயாரிப்பாளர் சுதாகர் செருக்குரி முடிவு செய்திருக்கிறார். குறிப்பிட்ட ஜானரில் படமெடுக்காமல், வித்தியாசமான கதைகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்துகிறார். அந்த வகையில், இவர் ஸ்ரீகாந்த் ஒடேலாவுடன் மீண்டும் இணைய இருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படம் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.

படக்குழுவினர்

நடிகர் - நானி

தொழில்நுட்பக் குழு:
இயக்குனர்: ஸ்ரீகாந்த் ஒடேலா
தயாரிப்பாளர்: சுதாகர் செருக்குரி
பேனர்: எஸ்.எல்.வி.சினிமாஸ்
பி.ஆர்.ஓ: சதீஸ்குமார்
மார்கெட்டிங்: பர்ஸ்ட் ஷோ

 

 

Tags: Nani, Srikanth Odela, Sudhakar Cherukuri, Sri Lakshmi Venkateswara ,Nani33

Share via: