விஜய் டிவியில் ‘Mr & Mrs சின்னத்திரை’ மூன்றாவது சீசன்
21 Apr 2021
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ‘Mr & Mrs சின்னத்திரை’ நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது.
இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீன் வரும் ஏப்ரல் 24ம் தேதி சனி அன்று மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
இந்நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் அவர்களது வாழ்க்கைத் துணையுடன் ஜோடியாக பங்கேற்பார்கள். இந்த சீசனிலும் நேயர்களைக் கவரும் விதத்தில் பல போட்டிகள், நடனம் என சுவாரசியமான சுற்றுக்கள் உண்டு.
தம்பதிகளின் மனம் மற்றும் அவரவர் துணையை புரிந்து கொண்டிருப்பதன் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
ராஜ்மோகன் - கவிதா, கோபாலகிருஷ்ணன் - ஹரிதா, சங்கர் - தீபா, யுவராஜ் - காயத்ரி, வேல்முருகன் - கலா, வினோத்குமார் - ஐஸ்வர்யா, சரத்குமார் - கிருத்திகா, யோகேஷ் - நந்தினி, மணிகண்டன் - சோபியா, திவாகர் - அபினயா, ஜாக் - ரோஷினி, அஜய் குமார் - ஆனந்தி ஆகியோர் போட்டியாளர்களாகப் பங்கேற்கிறார்கள்.
மாகாபா ஆனந்த் மற்றும் அர்ச்சனா தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக நீயா நானா கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி பங்கு பெறுகிறார்கள்.
ஏப்ரல் 24ம் தேதி முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு விஜய் டிவியில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.
Tags: vijay tv, mr and mrs chinnathirai