விஷ்ணு விஷால் நடிக்கும் ‘மோகன்தாஸ்’ ஆரம்பம்
06 Mar 2021
நடிகர் விஷ்ணு விஷால் அவருடைய தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அடுத்து நடிக்க உள்ள படம் ‘மோகன்தாஸ்’.
முரளி கார்த்திக் இயக்கத்தில், கேஎஸ் சுந்தரமூர்த்தி இசையமைக்கும் படம் இது. ஏற்கெனவே இப்படத்தின் அறிமுக டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று ஆரம்பமானது.
ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்திக் கதாநாயகியாக நடிக்கிறார், மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். மேலும், பூர்ணிமா பாக்யராஜ், கருணாகரன், அக்ஷய் ராதாகிருஷ்ணன், ஷாரிக், லாலு, பிரகாஷ் ராகவன் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.
இப்டத்தின் இயக்குனர் முரளி கார்த்திக் இதற்கு முன்பு ‘களவு’ படத்தை இயக்கியவர்.
'களவு' படத்தில் தன்னுடைய பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்களுடனே இந்தப் படத்திலும் பணிபுரியவுள்ளார் முரளி கார்த்திக்.
Tags: vishnu vishal, aishwarya rajesh, mohandass, murali karthik